;
Athirady Tamil News

வவுனியா சிறைச்சாலையில் மனித உரிமை ஆணைக்குழு அதிகாரி விசாரணை..!! (படங்கள்)

0

வவுனியா சிறைச்சாலைக்கு இன்று (11.05.2018) காலை 10.45 மணிக்கு வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரியும் சட்டத்தரணியுமான ஆர். எம் வசந்தராஜா தலைமையில் சென்ற குழுவினர் சிறைக் கைதிகளிடம் பல மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அண்மையில் சிறைக் கைதி ஒருவர், சிறைச்சாலையில் இடம்பெறும் ஊழல்கள், அராஜகங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட்டதையடுத்து, வவுனியா நீதிமன்ற நீதவான் சிறைச்சாலை அதிகாரியிடம் இக் குற்றச்சாட்டு தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இன்று திடிரேன வவுனியா மாவட்ட சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைதிகளிடம் நீண்ட விசாரணைகள் மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரியும் சட்டத்தரணியுமாக ஆர். எம் வசந்தராஜா, சிறைச்சாலையிலுள்ள கைதிகளிடமும், சிறைச்சாலை அதிகாரிகளிடமும், சிறைக்காவலர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கைகள் பெறப்பட்டுள்ளது.

பெற்றுக் கொள்ளப்பட்ட அறிக்கைகளை கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆணைக்குழுவின் அறிக்கைகள் எமக்கு கிடைத்த பிற்பாடு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + 3 =

*