;
Athirady Tamil News

காட்டில் தொடருந்தை நிறுத்தி பணியாளர்கள் போராட்டம்..!!

0

காட்டில் தொடருந்தை நிறுத்தி பணியாளர்கள் போராட்டம் பதுளை,மே.12 நாவலப்பிட்டி தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திலுள்ள காட்டுப்பகுதியில் தொடருந்துகளை நிறுத்தி ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

கொழும்பு தொடருந்து நிலையத்திலிருந்து பதுளை நோக்கி சென்ற தபால் தொடருந்தும் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தபால் தொடருந்து ஊழியர்களுமே இந்தப் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்தனர்.

வட்டகொடை தொடருந்து நிலையத்தில் கடமையாற்றிய அதிகாரி ஒருவருக்கும் தொடருந்தின் கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறுக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை எனத் தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக உடனடியாக உயரதிகாரியுடன் கலந்துரையாடல் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவித்ததன் பின்னர் இந்த பணிப்புறக்கணிப்புக் கைவிடப்பட்டது.

காட்டுப்பகுதியில் தொடருந்துகளை திடீரென நிறுத்தியமையால் பயணிகள் பல்லேறு சிரமங்களை எதிர்நோக்கினர் எனக் கூறப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − 1 =

*