;
Athirady Tamil News

சென்னை அணியில் இருந்து வௌியேறும் பிரபல வீரர்..!!

0

சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளராக இடம்பிடித்திருந்த மார்க் வுட் சென்னை அணியில் இருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஐபிஎல் 2018 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 7-ல் வெற்றி பெற்று 2-வது இடத்தில் உள்ளது.இந்நிலையில், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட் சென்னை அணியில் இருந்து வௌியேறுவதாக அறிவித்துள்ளார்.

இவர் இம்முறை ஐபிஎல் போட்டித் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் மட்டுமே விளையாடினார். அந்த போட்டியில் நான்கு ஓவரில் 49 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். தற்போது இங்கிலாந்து அணியில் இடம்பிடிப்பதற்காக பயிற்சியில் ஈடுபட சென்னை அணியில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதுகுறித்து மார்க் வுட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இங்கிலாந்தில் சம்மர் காலத்தில் நடைபெறும் கிரிக்கட் போட்டியில் தயாராவதற்காக சொந்த நாடு திரும்பும் முடிவை எடுத்துள்ளேன். கடினமாக பயிற்சி பெற்று டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க வேண்டும். தனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நான் இல்லை.

துர்காம் அணியில் விளையாட இருக்கிறேன். இதன்மூலம் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும் என நம்புகிறேன்; என்று பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × four =

*