கோண்டாவில் மக்கள் நலன்பேணும் அமைப்பினால் வீடு வழங்கல்..!! (படங்கள்)

கோண்டாவில் மக்கள் நலன்பேணும் அமைப்பினால் வீடு வழங்கல் – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அடிக்கல் நாட்டி வைத்தார்
கோண்டாவில் மக்கள் நலன்பேணும் அமைப்பின் ஏற்பாட்டில் கோண்டாவில் ஜே/119 பிரிவில் வசிக்கும் உதவி தேவைப்படும் குடும்பம் ஒன்றிற்கு ரூ.14 லட்சம் செலவில் வீடொன்று அமைத்து வழங்கப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று 11.05.2018 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் கோண்டாவில் மக்கள் நலன்பேணும் அமைப்பின் தலைவர் ஜெகபாலன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டு வீட்டுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் கு.மதுசுதன், மக்கள் நலன்பேணும் அமைப்பின் தலைவர் ஜெகபாலன், செயலாளர் தனுஷன், பேராசிரியர் தேவராஜா, பிரதேச கிராம சேவையாளர் விஜிதன் மற்றும் பயனாளிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.