;
Athirady Tamil News

சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்கள் இரணைதீவு மக்களுக்கு கிடுகு வழங்கினார்..!! (படங்கள்)

0

கிளிநொச்சி இரணைதீவு மக்களிற்கு தற்காலிக கொட்டகை அமைக்க தென்னங்கிடுகுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. இன்று மாலை 3 மணியளவில் மு.பா ம உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் குறித்த கிடுகுகளை வழங்கி வைத்தனர். இரணைமாதா நகரில் வைத்து குறித்தநிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது 10 ஆயிரம் கிடுகுகள் மற்றும் 10 ஆயிரம் கிடுகுகள் பின்னக்கூடிய ஓலைகளும் வழங்கப்பட்டதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். மக்களின் வேண்டுகுாளிற்கிணங்க பொது மக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் அன்பளிப்புகளோடு இந்த முதல் கட்ட உதவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் 14ம் திகதி முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் உள்ளிட்டோர் இரணைதீவுக்கு சென்று அவர்களிற்னு லான்ட்மாஸ்டர் மற்றும் மலசல கூடங்களை அமைப்பதற்கான உதவிகளையும் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவ்விடயத்தினை மக்கள் கோரிக்கையிட்டதாகவும், அதற்கமைய முதலமைச்சர் குறித் உதவிகளை செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை மாகாண சபை ஊடாக பல்வேறு உதவிதிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்த அவர், ஒட்டுமொத்தமாக இழந்துள்ள இரணைதீவு மக்களிற்கு மீள்குடியேற்ற அமைச்சும் உதவிகளை வழங்க முன்வர வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் காணப்படும் இழுபறிநிலை தொடர்பில் அவரிடம் வினவியபோது,
பல்கலைக்கழக மாணவர்களிடம் தான் உட்பட பலர் பேச்சுக்களில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இவ்வாறு தொடர்ந்தும் பேச்சுக்கள் இடம்பெற்று வரும் நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் உன்றுபடுத்தப்பட்ட நிகழ்வாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two − 1 =

*