;
Athirady Tamil News

வவுனியாவில் இயங்கி வந்த மசாஜ் நிலையம் இழுத்து மூடப்பட்டது: பிரதேச சபை அதிரடி முடிவு..!! (படங்கள்)

0

வவுனியாவில் இதுவரை காலமும் இயங்கி வந்த மசாஜ் நிலையம் இழுத்து மூடப்பட்டது பிரதேச சபை அதிரடியாக முடிவு

இது பற்றி அறியவருவதாவது

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் கீழ் உள்ள நெழுக்குளம் பகுதியில் இயங்கி வந்த மசாஜ் நிலையம் வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையினால் இழுத்து மூடப்பட்டுள்ளது இன்று காலை 11மணியளவில் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம்(ரவி) மற்றும் உப தவிசாளர் மகேந்திரன் தலைமையில் மேலும் சில பிரதேச சபை உறுப்பினர்களுடன் அப்பகுதிக்கு விஜயம் செய்த பிரதேச சபை குழுவினர் குறித்த மசாஜ் நிலையத்தை இழுத்து மூடியதுடன் பெயர் பலகையையும் கழற்றப்பட்டது

குறித்த மசாஜ் நிலையம் பிரதேச சபையில் சரியான அனுமதி பெறாமலே இதுவரை காலமும் இயங்கி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − two =

*