;
Athirady Tamil News

போலந்து வதை முகாமில் 1500 யூதர்கள் நச்சு வாயு செலுத்தி கொல்லப்பட்ட நாள் – மே 12, 1942..!!

0

அவுஸ்விட்ஸ் வதை முகாம் 1940-1945 காலப்பகுதியில் இருந்த நாசி ஜெர்மனியின் ஒரு மிகப்பெரிய வதை முகாம் ஆகும். இது ஜெர்மனி வசம் இருந்த தெற்கு போலந்தில் கிராக்கோவ் நகரிலிருந்து மேற்கே 50 கிலோமீட்டர் தூரத்தில், வார்சாவிலிருந்து 286 கிமீ தூரத்தில் அவுஸ்விட்ச் என்ற நகரருகில் அமைந்திருந்தது.

இம்முகாம் மூன்று முக்கிய பிரிவுகளைக் கொண்டிருந்தது. முதலாவது, அவுஷ்விட்ஸ் I, இது நிர்வாக மையம்; இரண்டாவது, அவுஷ்விட்ஸ் II (பிர்க்கெனாவு), கொலை முகாம்; மூன்றாவதாக, அவுஷ்விட்ஸ் III (மொனோவிட்ஸ்), தொழில் முகாம். முதல் இரண்டும் 1979 இலிருந்து உலக பாரம்பரியக் களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றைவிட கிட்டத்தட்ட 40 சிறு முகாம்கள் இம்முகாமைச் சுற்றி 10 கிமீ வட்டாரத்தில் இருந்தன.

ஐரோப்பாவின் பல நாடுகளிலும் இருந்து கைது செய்யப்பட்ட யூதர்கள் தொடருந்துகளிலும் வேறு வாகனங்களிலும் கூட்டம் கூட்டமாக மிகக் கடுமையான நெரிசலில் கொண்டுவரப்பட்டு இங்கு அடைக்கப்பட்டனர். உழைக்கக்கூடியவர்கள், உழைக்க முடியாதவர்கள், மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பயன்படக்கூடியவர்கள் என்று பல தேர்வு நடக்கும். ஏனையோர் சைக்ளோன்-பி என்ற பூச்சிக் கொல்லியாகப் பயன்பட்டு வந்த நச்சு வாயு பரவிய அறைகளில் அடைக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். குழந்தைகள் தாய்களிடமிருந்து பிரிக்கப்பட்டு வயதான பெண்களுடன் சேர்த்து நச்சுவாயு அறைகளுக்கு அனுப்பப்பட்டார்கள். மற்றும் பலர் கடும் உழைப்பு, ஊட்டச்சத்து இல்லாத உணவு, சுத்தமின்மை, பட்டினி, தொற்று நோய், தனிப்பட்ட மரண தண்டனைகள், மருத்துவப் சோதனைகள் போன்ற பல காரணிகளால் இறந்தனர்.

1942-ஆம் ஆண்டு மே மாதம் இதே நாளில் 1500 யூதர்கள் இந்த வதை முகாமில் நச்சு வாயு அறையில் அடைக்கப்பட்டு உயிரிழந்தனர்.

மேலும் இதே நாளில் நடந்த பிற நிகழ்வுகள்

*1656 – ஒல்லாந்தர் கொழும்பைக் கைப்பற்றினர்.

*1689 – பிரான்சுடன் போரிடுவதற்காக இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் ஒக்ஸ்பேர்க் கூட்டணியில் இணைந்தான்.

*1797 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் இத்தாலியின் வெனிஸ் நகரைக் கைப்பற்றினான்.

*1922 – 20 டன் விண்கல் வேர்ஜீனியாவில் வீழ்ந்தது.

*1949 – சோவியத் ஒன்றியம் பெர்லின் மீதான முற்றுகையை நிறுத்தியது.

*1952 – காஜ் சிங்க் ஜோத்பூரின் மன்னனாக முடி சூடினான்.

*1965 – சோவியத் ஒன்றியத்தின் லூனா 5 விண்கலம் சந்திரனில் மோதியது.

*1978 – சாயிரில், கொல்வேசி நகரைத் தீவிரவாதிகள் கைப்பற்றினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − one =

*