;
Athirady Tamil News

ரயில் டிக்கெட் விலைகளில் மாற்றம் கொண்டுவர இருக்கும் பிரித்தானியா..!!

0

பிரித்தானியாவில் 55 மில்லியன் வகை ரயில் கட்டணங்கள் நடைமுறையில் உள்ளதாக ரயில்வே நிர்வாகங்களின் பிரதிநிதி அமைப்பு ஒன்று தெரிவித்துள்ள நிலையில் ரயில் டிக்கெட் விலைகளில் மாற்றம் கொண்டுவர உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

இதற்காக ரயில் நிறுவனங்கள் பொது மக்களின் கருத்தைக் கேட்பதற்காக மக்கள் வாக்கெடுப்பு ஒன்றை நடத்த உள்ளன.

டிக்கெட் விற்பனையில் split ticketing என்பதுபோன்ற பல்வேறு வகைகள் உள்ளதால் எப்போதுமே குறைந்த கட்டணம் வசூலிக்க இயலாத நிலையில் இருப்பதாக ரயில்வே துறை கூறியுள்ளது

Split ticketing என்பது ஒரு நீண்ட பயணத்திற்கு ஒரே டிக்கெட்டாக வாங்காமல் ஒவ்வொரு சிறு இடைவெளிகளுக்கும் ஒரு டிக்கெட் வீதம் பல டிக்கெட்களை வாங்கும் முறையாகும்.

எப்படியானாலும் கொண்டு வர இருக்கும் மாற்றங்களால் டிக்கெட்களின் சராசரி விலையில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று ரயில்வே துறை கூறியுள்ளது.

புதிதாக கொண்டுவரப்பட இருக்கும் மாற்றங்களில் ரயில், பேருந்து மற்றும் ட்ராம் ஆகிய மூன்றிற்கும் ஒரே டிக்கெட்டை பயன்படுத்தும் முறை, பகுதி நேர பணியாளர்களுக்கான சலுகை டிக்கெட்கள் ஆகியவை உள்ளடங்கும்

இவையனைத்தையும் கருத்தில் கொண்டு ரயில்வே துறையில் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் குறித்த கருத்துக்களை அறிவதற்கான மக்கள் வாக்கெடுப்பு அடுத்த மாதம் தொடங்கி செப்டம்பர் வரை நடத்தப்படும்.

அதில் கிடைத்த முடிவுகள் ஒரு அறிக்கையாக தயார் செய்யப்பட்டு அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தப்படும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + seventeen =

*