;
Athirady Tamil News

9 வயது சிறுமியை காட்டுமிராண்டித்தனமாக உதைத்த கர்ப்பிணி பெண்: சிசிடிவியில் சிக்கிய வீடியோ காட்சி..!!

0

சீனாவில் 9 வயது சிறுமியை கர்ப்பிணி பெண் காலால் உதைத்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் Changsha பகுதியில் உள்ள தீம் பார்கிற்கு கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் திகதி Meng Meng என்ற 9 வயது சிறுமி தன் பள்ளி மாணவிகளுடன் சுற்றுலா சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த சிறுவன் ஒருவன் மாணவிகள் வரிசையாக சென்று கொண்டிருக்கும் போது, இடையில் புகுந்ததாக கூறப்படுகிறது

அந்த நேரத்தில் Meng Meng இடைமறித்துள்ளார். இதை அறிந்த அந்த சிறுவனின் தாய் உடனடியாக அவரிடம் வந்து பேசிக் கொண்டிருந்த போது, திடீரென்று தன் காலை வைத்து காட்டுமிராண்டித் தனமாக உதைத்துள்ளார்.

இது தொடர்பான காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியதால், அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவைக் கண்ட அந்த சிறுமியின் தாய் உடனடியாக இது குறித்து பொலிசில் புகார் அளித்துள்ளார்.

கர்ப்பிணி பெண்ணான அந்த பெண்ணை பொலிசாரால் தற்போது வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − 5 =

*