;
Athirady Tamil News

மகள் பிறந்ததை செல்போனில் பார்த்து கண்ணீர் விட்ட இராணுவ வீரர்: மனம் உருக வைக்கும் புகைப்படம்..!!

0

அமெரிக்காவில் இராணுவ வீரர் ஒருவர் விமான தாமதத்தின் காரணமாக தனக்கு பிறந்த மகளை செல்போனில் பார்த்து கண்ணீர்விட்டுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த Brooks Lindsey என்ற இராணுவ வீரரின் மனைவி Hayley கர்ப்பமாக இருந்துள்ளார். இதையடுத்து அவருக்கு நேற்று குழந்தை பிறக்கும் என்றும் Brooks Lindsey-க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தை ஆகப் போகிற சந்தோஷத்திலும் குழந்தை பிறக்கும் போது அங்கிருக்க வேண்டும் என்பதற்காகவும் Mississippi செல்வதற்காக விமானத்தில் செல்வதற்கு தயாராக இருந்துள்ளார்

அப்போது விமானம் வருவதற்கு தாமதமானதால், இவரால் அங்கு உரிய நேரத்திற்கு போக முடியவில்லை. இதனால் அவர் தன் குழந்தை பிறப்பதை வீடியோ கால் மூலம் போனில் பார்த்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

இதை சக பயணியான Tracy Dover என்பவர் புகைப்படமாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தததால், தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பதிவேற்றம் செய்யப்பட்ட சில மணி நேரங்களில் 120,000-க்கும் மேற்பட்ட முறை இந்த புகைப்படம் ஷேர் செய்யப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 5 =

*