;
Athirady Tamil News

5 வயது சிறுமியை 75 வயது முதியவரிடம் அனுப்பிய தாய்க்கு சிறை..!!

0

ஜார்ஜியாவில் தனது 5 வயது மற்றும் 6 வயது பெண் குழந்தைகளை பணத்திற்காக 75 வயது முதியவரிடம் அனுப்பிய தாய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Morgan Summerlin என்ற பெண்மணி வறுமையின் காரணமாக தனது இரண்டு குழந்தைகளையும் 75 வயது ரிச்சர்ட் என்பவரிம் அனுப்பியுள்ளார். இருவரையும் ரிச்சர்ட்டின் வீட்டிற்கு அழைத்து சென்று, அவர்களை அனுப்பிவிட்டு வெளியில் இருந்துகொள்வார்.

ரிச்சர்ட் இச்சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திவிட்டு, 100 டொலரை தாயிடம் கொடுத்தனுப்புவார். இதே போன்று, Alfredo Trejo என்ற நபரும் இச்சிறுமிகளை பலமுறை பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார்.

இதுகுறித்து பொலிசாருக்கு தெரியவந்ததையடுத்து, தாய் மற்றும் Trejo கைது செய்யப்பட்டனர். இதில் , குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த காரணத்தால் Trejo-க்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாய் Morgan தனது குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய காரணத்தால் அவருக்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + 14 =

*