;
Athirady Tamil News

யாழில் இன்றும் நாளையும் மின்தடை..!!

0

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமையும், நாளை ஞாயிற்றுக்கிழமையும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று சனிக்கிழமை(12) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்.குடாநாட்டின் தும்பளை, கற்கோவளம்,கற்கோவளம் ஐஸ் தொழிற்சாலை, புனிதநகர், மாதனை, வெளிச்ச வீடு, திகிரி, வறாத்துப்பளை ஆகிய பகுதிகளிலும்,

நாளை ஞாயிற்றுக்கிழமை(13) காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ். கரணவாய், பொலிகண்டி, பொலிகண்டி ஐஸ் தொழிற்சாலை, பளையின் ஒரு பகுதி, இலந்தைக்காடு,கரணவாய், எள்ளன் குளம், கொற்றாவத்தை, நெடியகாடு, அரசர் கேணி, கச்சாய் வெளி, தர்மகேணி, முகமாலை, இத்தாவில், எழுதுமட்டுவாள், உசன் , விடத்தற்பளை, கெற்பலி, மிருசுவில் தெற்கு, தவசிக்குளம், நாவலடி, ரோக்கியோ சீமெந்துக் கம்பனி(லங்கா), மிருசுவில் பி. எல்.சி, மிருசுவில் இராணுவ முகாம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 5 =

*