;
Athirady Tamil News

வவுனியா: எக்ஸ்ரே இயந்திரம் பழுது நோயாளிகள் அவதி : குற்றச்சாட்டை மறுக்கும் பணிப்பாளர்..!!

0

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் எக்ரே இயந்திரம் கடந்த ஜந்து நாட்களுக்கு மேல் பழுதடைந்து காணப்படுவதினால் தாங்கள் பல்வேறு சிரமத்திற்குள்ளாகுவதாக நோயாளிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதனால் தாங்கள் வைத்தியசாலைக்கு அருகில் காணப்படும் தனியார் மருத்துவமனைகளில் ரூபா.800 தொடக்கம் ரூபா.1000 வரை பணத்தினை செலுத்தி எக்ரே எடுக்க வேண்டியுள்ளதாகவும் பணம் இல்லாமையினால் அயலவர்களிடம் கடன் பெற்றே எக்ரே எடுக்கவேண்டியுள்ளது எனின் மக்களுக்கு என பொது வைத்தியசாலை ஏன் என மேலும் தெரிவித்தனர்.

இவ் விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.அகிலேந்திரம் அவர்களிடம் தொடர்பு கொண்டு வினாவிய போது,

ஆம் வைத்தியசாலையில் கடந்த ஜந்து நாட்களாக எக்ரே இயந்திரம் பழுதடைந்து காணப்படுகின்றது. அதனை சீர்செய்வதற்குறிய செயற்பாடுகள் நடைபெறுகின்றன.மற்றும் புதியதோரு எக்ரே இயந்திரம் சில நாட்களில் வைத்தியசாலையில் பூட்டப்படவுள்ளது

ஆனால் நாங்கள் எமது வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளிகளை திருப்பி அனுப்புவதும் இல்லை தனியாரிடம் சென்று எக்ரே எடுக்கவும் என தெரிவிப்பதுமில்லை

நோயாளிகளை வைத்தியசாலையில் அனுமதித்து அன்புலன்ஸ் வண்டி மூலம் செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று ஏக்ரே எடுப்பதாகவும் மேலதிக தகவல் தேவையேனின் நோயாளிகள் தன்னை நாடுமாறும் தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × three =

*