;
Athirady Tamil News

மே 18 நிகழ்வு தொடர்பாக சுதேசிய மக்கள் கட்சியினர் வெளியிட்டுள்ள அறிக்கை..!!

0

” தாயகக்கனவுடன் ஆயுதம் ஏந்தியவர்களும் அந்த உன்னதமானவர்களினுடய போராட்டத்தை இறுதிவரை நம்பி மன உறுதியுடன் பயணித்தவருமே அன்று முள்ளிவாய்க்காலில் வீரகாவியமாகி தாயக மண்ணுடன் விதையாகிப்போனார்கள்,

அவர்கள் சாகவில்லை சரித்திரம் அவர்களை தம் பக்கத்தில் இணைத்து கொண்டுள்ளது. அந்த புனிதர்களையும் அவர்களது உயிர்த்தியாகத்தினையும் நினைவு கூறும் நாளே!! மே 18
இந்த,நாள் வெறும் நினைவு கூறும் நாள் மட்டும் அல்ல

எமது தமிழ்மக்களிற்கு எதிராக நடை பெற்ற பாரிய இன அழிப்பிற்கு சான்றாக அமையும் நாளும் கூட. இன்று உலக நாடுகள் இலங்கையில் போர்க்குற்றம் , இன அழிப்பு இடம்பெற்றதாக கூற , அதை நல்லாட்சி அரசும் ஒப்புக்கொண்டுள்ளது எனவே எமது இனப்பிரச்சனைக்கான தீர்விற்கு உயர் அமுக்கம் கொடுக்கும் சர்வதேசத்தின் பார்வையை எம்பக்கம் திசை திருப்பும் நாளாகவும் அந்த பூனிதநாள் அமைகின்றது,

இவ்வாறு விலை பேச முடியாத உயித்தியாகத்தாலும் இரத்தகரையாலும் உருவாகிய உயரிய நாளை நாம் அப்பலுக்கற்று அரசியல் கலப்படம் அற்று பிரிவினை அற்று மிகவும் உன்னதமான முறையிலும் அமைதியான முறையிலும் அவர்களின் தியாகத்தினை மெச்சும் வகையில் அந்த சரித்திர நாயகர்களை நினைவுகூறுவது தமிழினத்தில் பிறந்த ஒவ்வொருவரினதும் கடமை அது உரிமையும் கூட,

அவ்வாறானோரின் உயிர்தியாகத்தை மெச்சி நாம் தலை சாய்த்து அவர்களின் ஆட்மாவிற்கு அஞ்சலி செலுத்தும் அந்த நாள் பொது நிகழ்வாககொண்டாடுவதே சாலச்சிறந்தது அதற்கு எவரும் அரசியல் சாயம் பூசாது
மதகுருமார்கள்,தமிழ் மக்கள், அரசியல்,தலைவர்கள், என அனைவரும் ஒரு குடையின்கீழ் நின்று உரிமையுடன் அந்த புணிதர்களை நினைவுகூறுவோமாக.

நன்றி
ச. மதிராஐ்
பொதுச்செயலாளர் சுதேசிய மக்கள்கட்சி

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 1 =

*