;
Athirady Tamil News

சம்பூர் விபத்தில் பெண் பலி..!! (படங்கள்)

0

சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைபரிச்சான் பாலத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 20 வயது யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற அப்பெண்ணிண் கணவன் படுகாயமடைந்த நிலையில், மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து, நேற்று (11) இடம்பெற்றுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும், சம்பூரில் தெரிந்த ஒருவரின் வீட்டுக்கு வந்து பின்னர் முல்லைத்தீவு நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் போதே, இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பெண்ணிண் சடலம், தற்போது மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × four =

*