;
Athirady Tamil News

யாழ் நீர்வேலி வாள்வெட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது..!!

0

யாழ்ப்பாணம், நீர்வேலியிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டதுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாவற்குழி பகுதியைச் சேர்ந்த இளைஞர் இருவரையே பொலிஸார் இன்று ( சனிக்கிழமை) கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மூவர் எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் கடந்த 7ஆம் திகதி இளைஞர்கள் இருவர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டது.

இதன்போது அப்பகுதியைச் சேர்ந்த அப்புத்துரை கிரிசன் (வயது -23) மற்றும் கிரிகேசன் (வயது -23) ஆகிய இருவரும் குறித்த வாள் வெட்டுத் தாக்குதலினால் படுகாயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × two =

*