;
Athirady Tamil News

சர்வதேச வான்வெளியில் ரஷ்ய குண்டுவீச்சு – விமானங்களை இடைமறித்த அமெரிக்க போர் விமானங்கள்..!!

0

அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவின் மேற்கு கடற்கரையில் இருந்து சுமார் 200 மைல் தொலைவில் அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலம் அமைந்துள்ளது. சர்வதேச வான்வெளியில் அமைந்துள்ள இப்பகுதியில் ரஷ்யாவுக்கு சொந்தமான இரண்டு டியூ-19 வகை போர் விமானங்கள் நேற்று பறந்து சென்றுள்ளன.

அவற்றை அமெரிக்காவின் நோராட் எப்-22 ரக போர் விமானங்கள் நடுவழியிலேயே இடைமறித்துள்ளது. அதைத்தொடர்ந்து வான் பாதுகாப்பு பகுதியை விட்டு ரஷ்ய போர் விமானங்கள் திரும்பிச் சென்றுவிட்டதாக வட அமெரிக்க விமான பாதுகாப்பு செய்திதொடர்பாளர் மேஜர் ஆன்ரூவ் ஹென்னெசி தெரிவித்துள்ளார்.

இதேபோல் கடந்த ஆண்டு மே 3-ம்தேதி ரஷ்ய விமானத்தை அமெரிக்க போர் விமானம் வழிமறித்து திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது. #USfighterjets #Russianbombers

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 3 =

*