;
Athirady Tamil News

12-ம் வகுப்பு புத்தகத்தில் மோடியை புகழ்ந்து சி.பி.எஸ்.இ. பாடம்..!!

0

என்.சி.இ.ஆர்.டி எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் 1961-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இது கல்வியில் சிறப்பான முன்னேற்றத்துக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு உதவுவதற்கும் அறிவுரை சொல்வதற்கும் மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பு ஆகும். இதன் தலைமையகம் டெல்லியில் உள்ளது.

என்.சி.இ.ஆர்.டி. அமைப்பின் பரிந்துரைபடியே சி.பி.எஸ்.இ.க்கு (மத்திய கல்வி வாரியம்) 1 முதல் 12-ம்வகுப்பு வரை பாட புத்தகங்களின் சில பாடங்கள் தயாரித்து வெளியிடப்படுகின்றன.

14 மாநிலங்களில் உள்ள 19 பள்ளி வாரியம் என்.சி.இ.ஆர்.டி. பாட புத்தகங்களை ஏற்றுள்ளன.

இந்த அமைப்பின் 12-ம் வகுப்பு புதிய பாட புத்தகத்தில் 2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதா பெற்ற வெற்றியும், மோடியை புகழ்ந்தும் இடம் பெற்றுள்ளது.

சுதந்திரம் அடைந்ததில் இருந்து இந்தியஅரசியல் என்ற தலைப்பில் புத்தகம் வெளியாகி உள்ளது. இந்த புத்தகத்தில் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா- மோடி பெற்ற வெற்றி வரலாற்று சிறப்பு மிக்கது என்று குறிப்பிட்டு உள்ளது.

மேலும் அந்த பாட புத்தகத்தில் இந்துத்துவாவை புகழ்ந்து பாடம் உள்ளது. இந்துத்துவா என்றால் தேசம் என்று குறிப்பிட்டு உள்ளது. கம்யூனிசம், மதசார்பின்மை, ஜனநாயகம் என்ற தலைப்பில் இடம்பெற்ற பாடத்தில் இந்துத்துவா பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. 1986-க்கு பிறகு பாரதிய ஜனதா அதன் சித்தாந்தத்தை எப்படி வெளிப்படுத்தியது என்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய கலாச்சாரத்தின் அடிப்படையில் தான் ஒரு வலுவான நாடு உருவாக்கப்படும் என்று இந்துத்துவா வாதிகள் வாதாடுவதாகவும் அதில் கூறப்படுகிறது.

மோடியை பாராட்டி பாட புத்தகத்தில் பாடம் வருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #CBSE #PMModi

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + 13 =

*