;
Athirady Tamil News

காணாமல் போனோர் அலுவலகம் அமைப்பதில், எமக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை..!!

0

காணாமல் போனோர் அலுவலகம் அமைப்பதில், எமக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை!!காணாமல் போணோரின் உறவுகள்!

காணாமல் போனோர் அலுவலகம் அமைப்பதை கடுமையாக எதிர்ப்பதுடன் அதில் எமக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் குடும்பங்களின் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனோர் குறித்து ஆராயும் குழுவின் ஆணையாளரான நிமல்கா பெர்னாண்டோ தலைமையில் இன்றையதினம் (12) காணாமல் போனோருக்கான அலுவலகம் அமைக்கப்படவிருந்த நிலையில் வவுனியாவிலிருந்து சென்ற காணாமல் போனோரின் உறவுகள் அவ் அலுவலகம் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். அதனைத் தொடர்ந்து இன்று மாலை வவுனியாவில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கா.ஜெயவனிதா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்

நாம் காணாமல் போனோர் அலுவலகத்தை கடுமையாக எதிர்ப்பதுடன் அதில் எமக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை காணாமல் போனோர் என்று யாரும் இல்லை என்று ஜனானதிபதி முன்னர் கூறி இருந்தார். பின்னர் இந்த அலுவலகத்தை அமைத்துள்ளார் எமது பிள்ளைகள் உண்மையில் இல்லை என்றால் இதனை அமைக்க வேண்டிய தேவை என்ன என கேள்வி எழுப்பினார்.

சிங்கள அரசு தமிழர்களை 2009 அண்டு அழித்த போது நிமல்கா எங்கிருந்தார்? செவ்வாய் கிரகத்திலா என கேள்வி எழுப்பினார். அத்துடன் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையால் ராணுவத்தால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களை நேரடியாக அழைத்து வருமாறு கூறி இருந்தனர், அதற்கு காணாமல் போனோர் குறித்து ஆராயும் குழுவின் ஆணையாளரான நிமல்கா பெர்னாண்டோ ராணுவ வீரர் ஒருவரின் மனைவியைஅழைத்து சென்று பாதிக்கப்பட்டவர் என்று கூறியுள்ளார.; எனவே இவ்வாறான ஒருவரை நாம் எவ்வாறு நம்புவது. அவர் பொய் சாட்சியத்தை அழைத்து சென்று சர்வதேசத்தையும் ஏமாற்றியுள்ளார் எனவே இவ்வாறானவர்கள் மூலம் எமக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை,

மனித உரிமை பேசும் சிங்கள அமைப்புகள் அப்போது என்ன செய்தன? இதனால் இந்த அரசையும் அதனுடைய அலுவலகத்தையும் நாம் இனியும் நம்பப்போவதில்லை கிறிஸ்தவ பாதிரியார்களும் எங்களுக்கு துரோகம் செய்துள்ளனர் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 4 =

*