;
Athirady Tamil News

புதிய வடிவில் பிக்பாஸ் 2 டீசர் வெளியானது… வியக்கவைக்கும் கமல்ஹாசன்..!! (வீடியோ)

0

பிரபல தொலைக்காட்சியில் டி.ஆர்.பி யில் அதிக மதிப்பை பெற்றதற்கு காரணம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஆரம்பிக்கபட்ட பிக்பாஸ் நிகழ்ச்சிதான்.

உலகில் அதிகமானோர் பார்த்து அதிக வரவேற்பையும் பெற்று கவர்ந்து வந்தது. கடந்த ஆண்டு பிக்பாஸ் டைட்டில் வின்னராக ஆரவ் தேர்வானார்.இந்நிலையில் அதிக எதிர்பார்ப்புகளுடன் இருந்து வந்தது பிக்பாஸ் 2.

அதற்காக நிகழ்ச்சி நடத்திய தொலைக்காட்சி கடந்த மாதம் முதல் கமல்ஹாசனை சந்தித்து பேசியுள்ளது. அதற்காக கமல்ஹாசன் கடந்த வாரம் பிக்பாஸ் 2 வேலைக்காக வெளியூர் சென்றுள்ளார்.

இந்நிலையில் மக்கள் காத்திருந்த பிக்பாஸ் 2 டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் பல மாற்றங்கள் காணப்பட்டுள்ளது.

பிக்பாஸின் சின்னமான கண் முழுமையாக நீலநிறத்தில் காணப்படும். ஆனால் தற்போதைய பிக்பாஸ் 2 -ல் தங்க நிறமாக காணப்படுகிறது.

அதிலும் கமல்ஹாசனை காட்டும்போது அவரது கண்ணில் பிக்பாஸ் கண் நீலநிறத்திலும், கடிகார வடிவில், முழு எந்திர அமைப்பில் உள்ளது.< \ கமல்ஹாசன் விரலில் சொடக்கு போட்டு ஆரம்பம் என்று சிரிக்கும் வீடியோ டீசராக அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.