;
Athirady Tamil News

சூப்பர் சிங்கரில் இளம்பெண்ணை அழவைத்த ஏ.ஆர்.ரகுமான்.. வைரலாகிய காணொளி..!!

0

பிரபல தொலைக்காட்சி நடைபெற்று பெறும் வரவேற்பை பெற்றுள்ள ரியாலிட்டி ஷோ தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. பல பாடகர்களை உருவாக்கி பிரபலம் ஆக்கிய பெருமை இந்நிகழ்ச்சிக்கு உள்ளது.

சமீபத்தில் நடந்த 6 வது சீசனில் சிவகார்த்திகேயன், சிம்பு போன்ற நடிகர்கள் வந்து மிரண்டுபோகும் அளவுக்கு போட்டியாளர்கள் பாடியுள்ளனர்.இந்நிலையில் உலகமே இசைக்காக கொண்டாடும் தமிழ் இசையமைப்பாளர் என்றால் அது ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான்.

சமீபத்தில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அவர் வந்துள்ளார்.இதில் ஒரு இளம்பெண் போட்டியாளர் பாடியது அவரை கவர்ந்துள்ளது. பாடி முடித்த இளம்பெண்ணிடம் ”நான் வாசிக்கிறேன், நீ பாடு” என்று சொல்லி இசையை வாசிக்க முன்வந்துள்ளார்.

இதனால் இன்ப அதிர்ச்சியில் அப்பெண் அழ ஆரம்பித்துள்ளார். இசைக்காக வாழ்ந்துவரும் ஏ.ஆர்.ரகுமான் வாசித்து பாடும் வாய்ப்பு யாருக்கும் கிடைக்காத பெருமை அப்பெண்ணிற்கு இப்போதே கிடைத்துள்ளது. இதனால் அரங்கமே உண்ர்ச்சிபூர்வமாக காணப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + eighteen =

*