;
Athirady Tamil News

விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ள ஆர்வமாம்! மெர்க்கலின் ஆசை..!!

0

குழந்தைகள் என்றால் தனக்குக் கொள்ளைப் பிரியம் என்று கூறியுள்ள பிரித்தானிய இளவரசர் ஹரியின் வருங்கால மனைவி மேகன் மெர்க்கல், திருமணமாகி தாயாகும் நாளை தான் ஆவலுடன் எதிர் நோக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மெர்க்கலின் தோழியான Gina Nelthorpe-Cowne, தன்னிடம் மெர்க்கல், இளவரசர் ஹரியின் நட்பு குறித்தும் குடும்ப வாழ்வு குறித்த ஆசைகள் குறித்தும் பேசியுள்ளதாகத் தெரிவித்தார்.

வேலை நிமித்தமாக கேமன் தீவுகளுக்கு இருவரும் இணைந்து பயணிக்கும்போது குழந்தைகள் குறித்துக் கேட்டதாக Gina தெரிவித்தார்

அதற்கு மெர்க்கல் தனக்கு குழந்தைகள் என்றால் தனக்கு கொள்ளைப் பிரியம் என்றும், தாயாகும் நாளை தான் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தாக Gina தெரிவித்தார்.

மெர்க்கல் இளவரசர் ஹரியை வரும் 19 ஆம் திகதி மணந்து அதிகாரப்பூர்வமாக ராஜ குடும்பத்தின் அங்கத்தினராக ஆக உள்ளார்.

இளவரசர் ஹரியும் குழந்தைகள் மீது தனக்குள்ள விருப்பம் குறித்து அவ்வப்போது பேசியுள்ளார். தனது அண்ணனின் குழந்தைகளான இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லட், குட்டி இளவரசர் லூயிஸ் மற்றும் தனது ஞானக் குழந்தைகள் குறித்து அவ்வப்போது அவர் பேசுவதுண்டு

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 13 =

*