;
Athirady Tamil News

கைகளை எரித்து கழிப்பறைக்குள் நடந்த கொடூரங்கள்! வெளியான அதிர்ச்சி சம்பவம்..!! (வீடியோ)

0

கொலம்பியாவில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளை 2 கன்னியாஸ்திரிகள் சேர்ந்து கொடூரமாக கொடுமைப்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போபாயன் நகரில் இயங்கி வருகிறது சாண்ட கிளாரா குழந்தைகள் காப்பகம்.இங்கு 65 குழந்தைகள் தங்கியிருந்த நிலையில் காப்பக பொறுப்பாளர்களாக சோர் இனிஸ் பெரிஸ் மற்றும் ரோசா எல்விரா ட்ரோசிஸ் ஆகிய இரு கன்னியஸ்திரிகள் இருந்து வந்தனர்.

இருவரும் சேர்ந்து காப்பகத்தில் தங்கியிருந்த குழந்தைகளை உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்

அதாவது, குழந்தைகளின் கைகளை எரிப்பது, அவர்களின் தலைகளை கழிப்பறைக்குள் நுழைப்பது மற்றும் குழந்தைகளின் முடிகளை வெட்டுவது போன்ற கொடூரமான விடயங்களை செய்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இதன் காரணமாக குழந்தைகள் கதறி அழும் சத்தம் அக்கம்பக்கத்தில் கேட்க அவர்கள் இது குறித்து பொலிசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து பொலிசார் இனிஸ் மற்றும் ரோசாவை கைது செய்து குழந்தைகள் அனைவரையும் மீட்டார்கள். காப்பகத்தில் இருந்த கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன

2014-லிருந்து 2017 வரை இருவரும் குழந்தைகளை கொடுமைப்படுத்தியதாக அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் அதை அவர்கள் மறுத்துள்ளனர்.

இதனிடையில் குறித்த குழந்தைகள் காப்பகம் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளால் அது ஏற்கனவே மூடப்பட்டு பின்னர் திறக்கபட்டதும் தெரியவந்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 15 =

*