;
Athirady Tamil News

சுன்­னா­கம் குடி­தண்­ணீர் பிரச்­சினைக்குத் தீர்வான கருவி பயன்­ப­டுத்த முடி­யாத நிலை­யில்..!!

0

சுன்­னா­கம் குடி­தண்­ணீர் பிரச்­சினை பூதாக­ர­மாக எழுந்­த­போது, புலம்­பெ­யர் தமி­ழர்­க­ளின் நிதிப் பங்­க­ளிப்­பு­டன் கொண்டு வரப்­பட்ட ப்ரொக் 4000 (FROG 4000) கருவி, தொண்­ட­ம­னாறு நீரி­யல் ஆய்வு மையத்­தில் பயன்­ப­டுத்த முடி­யாத நிலை­யில் உள்­ள­தாக, வடக்கு மாகாண நீர்­ப்பா­ச­னத் திணைக்­க­ளம் தெரி­வித்­துள்­ளது.

சுன்­னா­கம் குடி­தண்­ணீர்ப் பிரச்­சினை மிகத் தீவி­ர­மாக எழுந்த கால­கட்­டத்­தில், அந்­தப் பகு­தி­யைச் சுற்­றி­யுள்ள நிலத்­தடி நீரில் கலந்­துள்ள எண்­ணெய் மாசை மிகத் துல்­லி­ய­மா­கக் கண்­ட­றி­வ­தற்கு, ப்ரொக் 4000 கருவி கொண்டு வரப்­பட்­டது.

அமெ­ரிக்­கா­வில் உள்ள இலங்­கைத் தமிழ்ச் சங்­கத்­தி­ன­ரும் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் உள்ள இலங்­கைத் தமி­ழர்­கள் சில­ரும் இணைந்து 20 லட்­சம் ரூபா நிதிப்­பங்­க­ளிப்­பு­டன் இந்த ஆய்­வுக் கரு­வியை அனுப்பி வைத்­த­னர். அப்­போ­தைய விவ­சாய அமைச்­ச­ராக இருந்த பொ.ஐங்­க­ர­நே­சன், இந்­தக் கரு­வியை, சுன்­னா­கம் குடி­தண்­ணீர் பிரச்­சினை தொடர்­பில் ஆராய நிய­மிக்­கப்­பட்ட நிபு­ணர் குழு­வி­டம் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் திகதி கைய­ளித்­தி­ருந்­தார்.

இந்­தக் கரு­வி­யின் ஊடாக மேற்­கொள்­ளப்­பட்ட சோத­னை­க­ளின் அடிப்­ப­டை­யில், சுன்­னா­கத்­தைச் சுற்­றி­யுள்ள நிலத்­தடி நீரில் பார­தூ­ர­மான எண்­ணெய் மாசுக்­கள் எது­வும் இருக்­க­வில்லை என்று நிபு­ணர் குழு­வும், அப்­போ­தைய அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­ச­னும் அறி­வித்­தி­ருந்­த­னர்.

இந்­தக் கருவி தொடர்­பில் தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தின் ஊடாக, வடக்கு மாகாண நீர்­பா­ச­னத் திணைக்­க­ளத்­தி­டம் கேள்வி எழுப்­பப்­பட்­டி­ருந்­தது. அதற்கு தக­வல் அலு­வ­லர் எந்­திரி த.ராஜ­கோபு பதில் வழங்­கி­யுள்­ளார்.

இந்­தக் கருவி வழங்­கப்­பட்­ட­தி­லி­ருந்து இது­வரை 303 குடி­தண்­ணீர் மாதி­ரி­களே பரி­சோ­திக்­கப்­பட்­டுள்­ளது என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

‘இந்­தக் கருவி தற்­போது இயங்கு நிலை­யில் இருப்­பின் குடி­தண்­ணீர் பரி­சோ­த­னையை இப்­போ­தும் இல­வ­ச­மாக முன்­னெ­டுக்க முடி­யுமா ?’ என்ற கேள்­விக்கு, ‘இத­னைத் தொடர்ந்­தும் முன்­னெ­டுக்க இடர்­பா­டு­கள் காணப்­ப­டு­கின்­றது. இதற்­குப் பாவிக்­கப்­ப­டும் இர­சா­ய­னப் பொருள் காலா­வ­தி­யா­கி­விட்­டது. அத­னைப் பெற்­றுக் கொள்ள வேண்­டும். அந்­தப் பொருள் வெளி­நாட்­டி­லி­ருந்தே பெற்­றுக் கொள்­ளப்­பட வேண்­டும்.

பரி­சோ­த­னை­யி­னைச் செய்­வ­தற்கு பல்­க­லைக் கழ­கத்­தில் இந்­தத் துறை­யில் கல்வி கற்ற ஒரு­வரை ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் அனு­ம­தித்­தி­ருந்­தோம். தற்­போது குறித்த உத்­தி­யோ­கத்­தர் சுய விருப்­பின் பிர­கா­ரம் பத­வி­யி­லி­ருந்து வில­கி­ய­தால் இந்­தக் கட­மை­யினை ஆற்­று­வ­தற்கு தற்­போது எவ­ரும் இல்லை என்­ப­தால் தொடர்ந்து ஒரு­வரை புதி­தாக நிய­மித்­தல் வேண்­டும். இதற்­கான நட­வ­டிக்­கை­கள் எம்­மால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது’ என்று வழங்­கிய பதி­லில் கூறப்­பட்­டுள்­ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − eleven =

*