;
Athirady Tamil News

தந்தையின் தாக்குதலால் 5 மாதக் குழந்தை சாவு..!!

0

கந்தேகெட்டிய வெவேதென்ன பிரதேசத்தில் தந்தையின் தாக்குதலில் 5 மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்தது.

இந்தச் சம்பவம் நேற்று நடந்தது.

தந்தை, தடியால் தாய்க்கு தாக்கியுள்ளார். அந்தத் தாக்குதல் தாயிடம் இருந்த குழந்தை மீது விழுந்துள்ளது.

இதனால் காயமுற்ற குழந்தை கந்தேகெட்டிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் குழந்தையின் தந்தை பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + 4 =

*