பாகிஸ்தானில் இந்து வியாபாரி, மகன் சுட்டுக் கொலை..!!

பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் வாழும் இந்து மதத்தினரை குறிவைத்து சமீபகாலமாக கொலைவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பலூசிஸ்தான் மாகாணம், ஹப் மாவட்டத்தில் உள்ள கடானி என்ற பகுதி வழையாக வந்த ஜெய்பால் தாஸ் மற்றும் அவரது மகன் கிரிஷ்நாத் ஆகியோரை இங்குள்ள சிமெண்ட் தொழிற்சாலை அருகே அடையாளம் தெரியாத மர்மநபர்கள் நேற்று துப்பாக்கி முனையில் வழிமறித்தனர்.
அவர்களிடம் இருந்த பணத்தை கொள்ளயடிக்க முயன்றனர். இதை தடுத்த ஜெய்பால் தாஸ் மற்றும் அவரது மகன் கிரிஷ்நாத் ஆகியோரை துடிதுடிக்க சுட்டுக் கொன்றனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர். #Hindutradeshotdead