;
Athirady Tamil News

ஐபிஎல் 2018- பாதுகாப்பை மீறி விராட் கோலி காலை தொட்டு செல்பி எடுத்த ரசிகர்..!!

0

டெல்லி பெரேஸ் ஷா கோட்லா மைதானத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் நேற்று மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் 181 ரன்கள் சேர்த்தது. பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் விராட் கோலி (40 பந்தில் 70), டி வில்லியர்ஸ் (37 பந்தில் 72) அதிரடியால் 19 ஓவரில் 187 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராயல் சேலஞ்சர்ஸ் சேஸிங்கின் போது விராட் கோலி அபாரமாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பலத்த பாதுகாப்பையும் மீறி விராட் கோலியின் ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்து விராட் கோலியின் அருகில் வந்து காலை தொட்டு வணங்கினார். பின்னர் விராட் கோலியுடன் தயாராக வைத்திருந்த போன் மூலம் செல்பி எடுத்துக் கொண்டார்.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ரசிகர்கள் மைதானத்திற்கள் வந்தது பாதுகாப்பை வீரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் அவரை பிடித்து வெளியேற்றினார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 3 =

*