;
Athirady Tamil News

10 ஆண்களை திருமணம் செய்த பெண்: பொதுமக்கள் முன்னிலையில் கொடுக்கப்பட்ட அதிர்ச்சி தண்டனை..!!

0

சோமாலியாவில் 10 ஆண்களை திருமணம் செய்த பெண் கல்லாலே அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சோமாலியாவில் Al Shabaab என்ற கிளர்ச்சியாளர்கள் இஸ்லாமிய விதிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். இந்த விதிமுறைகளை மீறுபவர்கள், அவர்கள் உருவாக்கியிருக்கும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்

இந்நிலையில் Lower Shabelle பகுதியின் Sablale-யைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க Shukri Abdullahi என்ற பெண் 10 ஆண்களை திருமணம் செய்துள்ளார்.

இதில் ஒருவரை மட்டுமே சட்டப்படி திருமணம் செய்துள்ள அவர் மற்ற 9-ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இது கிளர்ச்சியாளர்களின் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதால், அந்த பெண்ணுக்கு கடுமையான தண்டனையான கல்லெறி தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது

அதாவது இது போன்ற தவறு செய்யும் ஆண்களோ, பெண்களோ பூமிக்கடியில் தலை மட்டும் தெரியும் அளவிற்கு விட்டு விட்டு புதைத்துவிடுவர்.

அதன் பின் பலர் முன்னிலையில் அந்த நபர் மீது கல்லைக் கொண்டு வீசுவர். இதில் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துவிடுவார். இதுமட்டுமின்றி அங்கு திருடினால் அவர்களின் கைகள் துண்டாக்கப்படும், இதைத் தவிர பல கடுமையான தண்டனைகளும் அங்கு கொடுக்கப்பட்டு வருகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − two =

*