;
Athirady Tamil News

பிரித்தானிய இளவரசர் ஹரி- மெர்க்கல் திருமணத்தில் பெற்றோர் கலந்து கொள்வார்களா? அரச குடும்பம் விளக்கம்..!!

0

உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பிரித்தானிய இளவரசர் ஹரி- மெர்க்கல் திருமணம் மே 19 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற நிலையில், ஒவ்வொரு நாளும் இவர்கள் குறித்த செய்திகள் பிரித்தானிய செய்திதாள்களில் தலைப்பு செய்தியாக இடம்பிடிக்கின்றன.

இந்த திருமணத்தில் மேகன் மெர்க்கலின் பெற்றோர் கலந்துகொள்வார்களா என்பது சில மாதங்களாக விவாதத்தில் இருந்துள்ளது.

இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அரசகுடும்பத்தில் சார்பில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மெர்க்கலின் பெற்றோர் இந்த திருமணத்தில் முக்கியமாக கலந்துகொள்வார்கள்

திருமணத்திற்கு முந்தைய நாள் இளவரசர் ஹரியை, மெர்க்கலின் பெற்றோர் Thomas Markle மற்றும் Doria Ragland சந்தித்து பேசுவார்கள். மணமக்களின் பெற்றோர் திருமணத்தில் முக்கிய பங்கு வகிப்பார்கள்.

மெர்க்கலின் தாய், அவரது மகன் மெர்க்கலோடு சேர்ந்து தான் திருமணம் நடைபெறும் St George’s Chapel-க்கு வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + 6 =

*