;
Athirady Tamil News

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை, “நல்லாட்சி” அரசு எட்டாது..! -புளொட் தலைவர் சித்தார்த்தன்! (படங்கள், வீடியோக்கள்)

0


தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை, நல்லாட்சி அரசு எட்டாது..! -புளொட் தலைவர் சித்தார்த்தன்! (படங்கள் வீடியோக்கள்)

வவுனியாவில் புளொட் அமைப்பின் மத்தியகுழு கூட்டம் கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தாத்தன் தலைமையில் இன்று (13) காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை நடைபெற்றது. கூட்டத்தின முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தாத்தன்..,

மத்தியகுழு கூடி தற்கால அரசியல் நிலைமை தொடர்பாகவும், மத்தியில் அரசியலில் பலமாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த மாற்றங்கள் தமிழ் மக்களை எப்படி பாதிக்கும் என்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டது.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை இந்த அரசு எட்டாது என்பது எனக்கு தெளிவாகவே தெரிகிறது.

காணாமல் போணோர் விவகாரம், அரசியல் கைதிகள் பிரச்சனைகள், காணி விடுவிப்பு தொடர்பான பிரச்சனைகள் ஆராயப்பட்டது. மாகாணசபை தேர்தல் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் தனிக்கட்சி ஆரம்பித்தாலும் கூட்டமைப்பின் ஒரு அங்கமாக செயற்படலாம்.

புளொட் அமைப்பு தனது தனித்துவத்தை பேணுவதற்கு முன் மக்களின் பிரச்சனைகளுக்காகவே ஒரு பலமான கூட்டமைப்பாக இருக்கிறோம். இருந்த போதும் கூட்டமைப்பானது இன்றைய நிலைமையில் பலவீனமாகவே இருக்கிறது.

தமிழரசுக்கட்சி கூட்டமைப்பை பலமானதாக வைத்திருக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேல் தமிழ் மக்கள் கொண்டுள்ள விரக்தியின் காரணமாகவே, பெரும்பான்மை கட்சிகள் உள்ளுராட்சி மன்றங்களில் வெற்றிபெறக் காரணமாக இருந்தது என குறிப்பிட்டார்.

புளொட் அமைப்பின் மத்தியகுழு கூட்டம் நடைபெற்றதன் பின்னர், தனிப்படட மக்கள் சந்திப்புக்களும் இடம்பெற்றிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × four =

*