;
Athirady Tamil News

வவுனியாவில் ரெலோ அமைப்பின் சார்பில், முள்ளிவாய்க்கால் தினம் அனுஸ்டிப்பு!! (படங்கள் வீடியோக்கள்)

0


வவுனியாவில் ரெலோ அமைப்பின் சார்பில், முள்ளிவாய்க்கால் தினம் அனுஸ்டிப்பு!! (படங்கள் வீடியோக்கள்)

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் இன்று (13.05.2018) மாலை 6.00 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகேயுள்ள பண்டாரவன்னியன் நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மாகாணசபை உறுப்பினரும் ரெலோ முக்கியஸ்தருமான சிவாஜிலிங்கம், வவுனியா நகரசபை உறுப்பினர்கள் , முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் , தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள், வவுனியா மாவட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் , சமூக ஆர்வளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்ததின்போது உயிரிழந்தவர்களுக்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன், மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதேவேளை மேற்படி நிகழ்வுக்கு விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே கலந்து கொண்டமை விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.

இதுகுறித்து அரசியல் பிரமுகர், ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில் “எந்தவொரு அறிவிப்பும் இல்லாது, தமது அமைப்பின் பெயருக்காக தனிப்பட்ட ரீதியாக நடத்தினால், மக்கள் எவ்வாறு கலந்து கொள்வார்கள்?” என ஆதங்கப்பட்டு உள்ளதும் குறிப்பிடத் தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − 7 =

*