;
Athirady Tamil News

ஏழாலை இந்து இளைஞர்சபையின் இரத்ததான நிகழ்வு – மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆரம்பித்து வைத்தார்..!! (படங்கள்)

0

ஏழாலை இந்து இளைஞர் சபையினரால் ஒழுங்கமைக்கப்பட்ட இரத்த தான நிகழ்வு இன்று 13.05.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் ஏழாலைமேற்கு உதயசூரியன் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் பிரதம விருந்தினராகக்கலந்துகொண்டு விழாவை ஆரம்பித்து வைத்ததுடன், சிறப்பு விருந்தினர்களாக வலி.தெற்கு (சுன்னாகம்) பிரதேசசபைத்தலைவர் க.தர்ஷன் மற்றும் வலி.வடக்கு (தெல்லிப்பழை) பிரதேசசபைத்தலைவர் சோ.சுகிர்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

விருந்தினர்களுடன் குருதிக்கொடையாளிகள், சனசமூக நிலைய உறுப்பினர்கள், இளைஞர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + two =

*