;
Athirady Tamil News

வவுனியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணி புறக்கணிப்பு! மக்கள் அவதி..!! (படங்கள்)

0

வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (14) ஒரு நாள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாணம் தழுவிய ரீதியில் நடைபெற்றுவரும் வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்பானது வவுனியாவிலும் முன்னெடுக்கப்படுகிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வவுனியா மாவட்டத்தின் உப தலைவர் செ.மதுரகன்

2015 ஆம் ஆண்டிலிருந்து வைத்தியர்களுக்கு விகிதாசார அடிப்படையில் சம்பள அதிகரிப்பானது அதிகரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்த நிலையில், மேலதிக கொடுப்பனவுகள் தொடர்பாக அரச சுற்றறிக்கைக்கு அமைவாக ஏனைய மாகாணங்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் வடமாகாணத்திலுள்ள வைத்தியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அடையாள பணி பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

????????????????????????????????????

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + 14 =

*