;
Athirady Tamil News

புகையிரதத்தில் மோதி பொலிஸ் அதிகாரி பலி..!!

0

கட்டுநாயக்க, 18 ஆம் கட்டை புகையிரத பாதையில் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிலாபத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் படு காயமடைந்த நபரை நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பண்டாரகம பகுதியை சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + 17 =

*