;
Athirady Tamil News

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 குழந்தைகள் பலி..!!

0

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி காங்கோவைச் சேர்ந்த 5 குழந்தைகள் உயிரிழந்தனர்.

காங்கோவில் இருந்து அகதிகளாக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த குடும்பம் ஒன்று வடக்கு கரோலினா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தது.

அவர்கள் தங்கியிருந்த வீட்டில் அதிகாலை 4 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். அந்த தீயில் சிக்கி 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த மூன்று குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் அந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த 5 குழந்தைகளும் 8 வயதுக்கும் குறைவானவர்கள் என்று கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + 11 =

*