;
Athirady Tamil News

வவுனியா பிரதி விவசாயப்பணிப்பாளரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு முதலமைச்சருக்கு அவசரக்கடிதம்..!!

0

வவுனியா மாவட்டத்தின் பிரதி விவசாயப்பணிப்பாளர் திரு. தட்சணாமூர்த்தி யோகேஸ்வரனின் முறையற்ற இடமாற்றத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு வடமாகாணசபை உறுப்பினர்களான ப. சத்தியலிங்கம், ம. தியாகராசா, ஜி.ரி. லிங்கநாதன், இ. இந்திரராசா ஆகியோர் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று வடமாகாண விவசாய அமைச்சர் க. சிவநேசனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இதன் பிரதி ஒன்று வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போது வுவுனியா மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளருக்கு மன்னார் மாவட்டத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது இவரின் இடமாற்றத்தினால் வவுனியா மாவட்ட விவசாயத்துறைசார் அபிவிருத்தி பாதிக்கப்படுமென பல விவசாய அமைப்புக்கள் தங்களிடம் முறையிட்டுள்ளதாகவும் ஏற்கனவே கஸ்டப்பிரதேசத்தில் கடமையாற்றியவர் என்ற வகையிலும் வவுனியா மாவட்ட விவசாயத்தைப்பாதிக்காத வகையிலும் இவர் தொடர்ந்து வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றுவதற்கு அனுமதிக்குமாறு மாவட்ட விவசாயிகள் சார்பில் தெரிவித்துக் கொள்வதாக வடமாகாணசபை உறுப்பினர்கள் அனுப்பியுள்ள அவசரக்கடித்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + 6 =

*