;
Athirady Tamil News

வவுனியா வைரவப்புளியங்குளம் வீதியில் கழிவுகள். அசௌகரியங்களுக்கு மத்தியில் மக்கள்..!! (படங்கள்)

0

வவுனியாவில் வைரவப்புளியங்குளம் குளக்கட்டுப்பகுதியில் கடந்த சில தினங்களாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றமை அதிகரித்துக்காணப்படுகின்றது. இதனைக்கட்டுப்படுத்துவதில் நகரசபையினர் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொள்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நேற்று வைரவப்புளியங்குளம் குளக்கட்டு வீதிகளில் இறைச்சிக்கு வெட்டப்பட்ட கோழிகளின் எச்சங்கள் ஒரு பையில் எடுத்துவரப்பட்டு நடு வீதியில் இனந்தெரியாதவர்கள் வீசிவிட்டு சென்றுள்ளனர். அப்பகுதியால் செல்லும் பொதுமக்கள் இதனால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். கடந்த சில தினங்களாக இவ்வாறு அப்பகுதியில் குப்பைகள் வீசப்பட்டு வருகின்றதைக்காணக்கூடியதாக உள்ளதாகவும் இதனைக்கட்டுப்படுத்தவதற்கு நகரசபையினர் நடவடிக்கை மேற்கொள்ளத் தவறியுள்ளதாகவும் நகரசபைக்கு உறுப்பினராகத் தெரிவானவர்கள் இவ்விடயத்தில் கவனம் எடுக்கத் தவறிவிட்டதாகவும்

குறிப்பாக வைரவப்புளியங்குளம் பகுதியில் பிரசித்தி பெற்ற இந்து ஆலயம் ஒன்றும் காணப்படுகின்றது இவ்வாறு காணப்படும் ஆலயத்திற்குச் செல்லும் வீதியில் இறைச்சிக்கு வெட்டப்பட்ட கோழிகளின் எச்சங்கள் திட்டமிடப்பட்டு வீசப்பட்டு வருவதாகவும் இதனால் ஆலயங்களுக்குச் செல்லும் மக்கள் உட்பட அவ்வீதியால் பயணிக்கும் மாணவர்கள் வரை அசௌகரியத்திற்குட்படுவதாகவும் இக்கழிவுகளை இறைச்சிக்கடை வைத்திருக்கும் வர்த்தகர்களே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இதனைக்கட்டுப்படுத்தவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் அவ்வாறு மேற்கொள்ளத்தவறினால் பொதுமக்களைத்திரட்டி நகரசபையினருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடவேண்டிய நிலை தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − five =

*