;
Athirady Tamil News

தீ விபத்தில் வீடு முற்றாகச் சேதம்..!! (படங்கள்)

0

தலவாக்கலை ஒலிரூட் பிரதேச பகுதியில் இன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

மின் ஒழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. தீ ஏற்பட்ட போது வீட்டில் யாரும் இல்லை. அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருள்கள் தீக்கிரையாகியுள்ளன. சம்பவ இடத்துக்பு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களைக் கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 5 =

*