;
Athirady Tamil News

அதிவேக நெடுஞ்சலை நிர்மாணப் பணிக்கு 1 பில்லியன்..!!

0

இலங்கையின் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ஆரம்பகட்ட நிர்மாணப் பணிகளுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க சீன அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்று (திங்கட்கிழமை) சந்தித்த இலங்கைக்கான சீன தூதுவர் செங்ஸியுவான் இது குறித்து தெரிவித்துள்ளதாக பிரதமரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த கடன் திட்டத்துக்கான நடைமுறைகள் குறித்து சீன எக்ஸிம் வங்கிக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சீன சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கையெழுத்திடுவதற்கான பேச்சு வார்த்தைகளை துரிதப்படுத்த இலங்கை தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சீன தூதுவர் பிரதமரிடம் கோரியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + 6 =

*