;
Athirady Tamil News

தாழங்குடாவில் 17 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை..!! (படங்கள்)

0

மட்டக்களப்பு தாழங்குடா பிரதேசத்தில் வேடர்குடியிருப்பு, கடற்கரை வீதியைச் சேர்ந்த சகாயநாதன் விதுசனா (வயது 17) என்பவரே இன்று (14) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

2017 சாதாரண தரப் பரீட்சை எழுதிய இவ் மாணவி காதல் விவகாரம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இன்று காலை 8:30 மணி வேளையில் தனது நண்பர்களுக்கு தொலைபேசியில் இருந்து குறுந் தகவல்களை அனுப்பி விட்டே தூக்கிட்டுள்ளார். தந்தை வெளிநாட்டில் வேலை செய்கின்றார், இவரது தாய் தனது சிறிய பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற பின்னரே இச் சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரு குறுகிய நேரத்துக்குள் தூக்கிட்டு இவர் இறந்துள்ள சம்பவம் பிரதேசத்தில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக் காலங்களில் வலைத்தள தொலைபேசிப் பாவனைகள் இளம் வயதினர் மத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன், இளம் வயது காதல் விவகாரங்களால் தற்கொலையை முடிவாகக் கொண்டு தனது வாழ்க்கையினை சீரழித்துக் கொள்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணையை காத்தான்குடிப் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 5 =

*