;
Athirady Tamil News

கொத்மலை பிரதேச செயலகத்திற்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டம்..!! (படங்கள்)

0

கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட நவதிஸ்பன மக்கள் காணி மற்றும் வீடு வேண்டுமெனக் கோரி இன்று (திங்கட்கிழமை) கொத்மலை பிரதேச செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியவண்ணம் காணிகளும் வீடுகளும் அடிப்படை வசதிகளும் வேண்டுமெனக் கோரி கோஷமிட்டனர்.

பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், அபிவிருத்தி குழு கூட்டத் தலைவரும் மத்திய மாகாண உறுப்பினருமான அசோக ஹேரத், பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் போன்றோர் கொத்மலை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இது குறித்து ஆராய்ந்தனர்.

இதன்போது, ஆறு மாதத்திற்குள் இப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கப்பெறும் எனவும் முதல்கட்டமாக அமைச்சர் லக்ஷமன் கிரியெல்லவிடம் இது தொடர்பில் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்படும் எனவும் அபிவிருத்திக்குழு கூட்ட தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அசோக ஹேரத் ஆர்ப்பாட்டகாரர்களிடம் தெரிவித்தார். அதன்பின் ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.

நவதிஸ்பன கட்டுகல்ல மற்றும் மொச்சகோட்டை ஆகிய பகுதியில் வாழ்ந்த 600இற்கும் மேற்பட்ட குடும்பங்கள், மகாவலி அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்பட்டபோது சுமார் 10000 ரூபா கொடுப்பனவு வழங்கி வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + 7 =

*