;
Athirady Tamil News

உண்மையானதை மட்டும் பிரசுரியுங்கள் – வவுனியா வர்த்தக சங்கத்தலைவர் வேண்டுகோள்..!!

0

பத்திரிகை தர்மப்படி உண்மையானதை மட்டும் பிரசுரியுங்கள் என வவுனியா வர்த்தக சங்கத்தலைவர் இராசலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் பரமேஸ்வரன் மீது அண்மையில் தாக்குதல் மேற்கொண்டவர் வவுனியா பொலிஸில் சரணடைந்துள்ளார்.

இந்நிலையில் அவரைக் காப்பாற்றும் முயற்சியில் வவுனியா வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் ஈடுபட்டு வருவதாக ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

தாக்குதலினை மேற்கொண்டவர் வர்த்தக சங்க உறுப்பினர் என்ற ரீதியில் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையையே செய்திருந்தோம்.

இச்சம்பவம் தொடர்பான முழுவிபரங்களையும் அறிந்த பின்னரே அது தொடர்பான முழு விபரங்களையும் வெளியிட வேண்டும். எனவே குறித்த ஊடகத்தில் வெளியான தகவல்களை வவுனியா வர்த்தக சங்கம் மறுப்பதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்கள் இடம்பெறுவதைத் தவிர்க்க வேண்டும்’ என வவுனியா வர்த்தக சங்கத்தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 7 =

*