;
Athirady Tamil News

ஜனாதிபதி – ஈரானில் உள்ள இலங்கையர்கள் சந்திப்பு..!!

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது 2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்த பின்னர் இன்று பிற்பகல் நாடுதிரும்பவுள்ளார்.

ஜனாதிபதிக்கும் ஈரான் ஜனாதிபிதிக்கும் இடையில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை நேற்று ஈரான் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதனிடையே ஈரானின் டெஹரான் நகரில் வசிக்கும் இலங்கையர்களையும் ஜனாதிபதி நேற்று பிற்பகல் சந்தித்தார்.

இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக அவர்களுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி, அவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இச்சந்திப்பில் கல்விமான்கள், தொழிற்துறை நிபுணர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டதுடன், ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பளித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 4 =

*