;
Athirady Tamil News

தேசிய அணியை உருவாக்க உள்ளூர் கிரிக்கட்டைப் பலப்படுத்த வேண்டும்: அர்ஜுன..!!

0

எமது தேசிய கிரிக்கட் அணியைப் பலப்படுத்த வேண்டுமானால் வெளிமாவட்ட மட்ட கிரிக்கட் விளையாட்டை அபிவிருத்தி செய்யவேண்டும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வராக் கல்லூரி மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற 25ஆவது (battle of Gold) ஒருநாள் கிரிக்கட்போட்டியில் தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்தப் பாடசாலை அணிகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டியில் கலந்துகொள்வதில் எனக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. பாடசாலை மட்ட கிரிக்கட் போட்டிகளில் இருந்தே தேசிய கிரிக்கட் வீரர்கள் உருவாகின்றனர். ஆனால் தற்போது துரதிஷ்டவசமாக கிரிக்கட் விளையாட்டின் தரம் குறைந்துள்ளது.

எமக்குத் தெரியும் திறைமையான இளம் கிரிக்கட் வீரர்கள் வருவது வெளியிலிருந்தேயாகும். அது வடக்கு கிழக்கு ஆகலாம் அல்லது தெற்கு மேற்கு ஆகலாம்.

96ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் எமது அணியில் 70 வீதமான வீரர்கள் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். கொழும்பு கிரிக்கட் வீரர்கள் அல்ல.

இதனால் தான் நான் கிரிக்கட் சபைக்கு வெளிமாவட்ட கிரிக்கட் விளையாட்டை அபிவிருத்தி செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றேன்” என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + 15 =

*