;
Athirady Tamil News

யாழ் இந்து பழைய மாணவர்களால் வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் கையளிப்பு..!! (படங்கள்)

0

யாழ் இந்துக்கல்லூரி 2005 உயர்தர பழைய மாணவர்களால் முன்னெடுக்கப்படும், கல்விக்கான ஊக்குவிக்கும் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக, கிளிநொச்சி மற்றும் துணுக்காய் வலயக்கல்விக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 25 துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு 12.05.2018 சனிக்கிழமை குறித்த கல்வி வலயக்கல்வி பணிமனைகளில் வலய கல்விப்பணிப்பாளர், அதிபர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் சிறப்புடன் நடைபெற்றது.

இத் திட்டத்தினூடாக கடந்த 3 வருடங்களில், 128 துவிச்சக்கர வண்டிகள், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் துணுக்காய் வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ் செயற்திட்டத்தில் உள்வாங்கப்பட்ட பாடசாலைகளின் விபரங்கள் பின்வருமாறு….

கி/புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயம் – 05
கி/பாரதி வித்தியாலயம் – 01
மு/திருமுறிகண்டி இந்து வித்தியாலயம் – 03
மு/தேறாங்கண்டல் அ.த.க.பாடசாலை – 03
மு/யோகபுரம் மகா வித்தியாலயம் – 02
மு/துணுக்காய் அ.த.க.பாடசாலை -03
மு/விநாயகபுரம் அ.த.க. பாடசாலை -08

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × one =

*