;
Athirady Tamil News

காசோலை மோசடி! வவுனியா உதைபந்தாட்ட சங்க செயலாளர் கைது..!!

0

வவுனியா உதைபந்தாட்ட சங்கத்தின் செயலாளரும் ரெலோவின் மாவட்ட உதவிப் பொறுப்பாளருமான ராஜன் காசோலை வழக்கொன்றில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவருக்கு காசோலை வழங்கி அதில் பணம் இல்லாத நிலையில் குறித்த காசோலையைப் பெற்றவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் ரெலோவின் மாவட்ட உதவிப் பொறுப்பாளர் என்பதுடன் கூட்டமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவரின் கணவருமாவார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 8 =

*