;
Athirady Tamil News

வவுனியாவில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு..!! (படங்கள்)

0

இலங்கை உள்ளுர் ஆழுகை நிறுவனம் மற்றும் யு.என்.டி.பி. ஆகிய நிறுவனங்களின் அனுசரணையுடன் அண்மையில் தேர்ந்தேடுக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களுக்கான பயிற்சி கருத்தமர்வு உள்ளுராட்சி திணைக்களகத்தின் ஆணையாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (15) நடைபெற்றது.

இச் செயலமர்வானது கட்சி பேதமின்றி உள்ளுராட்சி மன்றங்களின் சட்ட ஏற்பாடுகளை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தவும், உள்ளுராட்சி மன்ற முத்திரைத் தீர்வை, நீதிமன்ற தண்டப்பணம் தொடர்பான மாகாண சபையின் வகிபாகம், பொதுக் கணக்காய்வு, உள்ளக கணக்காய்வு போன்றன பற்றிய தெளிவு படுத்தல்களும் இடம்பெற்றிருந்தது.

வவுனியா நகரசபை நகரபிதா, உபநகரபிதா மற்றும் பிரதேசபை தலைவர்கள், உறுப்பினர்கள் என 2012 பேர் இக்கருத்தமர்வு நிகழ்வில் கலந்தகொண்டிருந்தனர்.

இந் நிகழ்வில் வளவாளர்களாக வடமாகாண பிரதம செயலாளர் (நிதி) எஸ்.யு.சந்திரகுமாரன், பிரதி கணக்காய்வாளர் நாயகம் ஜி.தேவஞானன், பிரதி பிரதம செயலாளர் (பொறியியல்) எஸ்.சண்முகானந்தன், பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி எஸ்.சரோஜினி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + 20 =

*