;
Athirady Tamil News

கொலை ஒன்றுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது..!!

0

தனமல்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் அண்மையில் கோடாரியால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் தனமல்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாளாந்த வட்டி செலுத்தும் முறைக்கு பணம் வழங்கும் நபர் ஒருவர் இந்த பிரதேசத்தில் அண்மையில் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் சந்தேகநபரை தேடி தனமல்வில பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இந்நிலையில் கொலைச் சந்தேகநபர் நேற்று (14) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சூரியவெவ, தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வேறொரு நபரிடம் ஒரு இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்டு இந்தக் கொலையை செய்துள்ளதாக சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கொலை செய்வதற்கு தூண்டியவர் தற்போது பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அந்தச் சந்தேகநபரை கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் இன்று வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × two =

*