;
Athirady Tamil News

அமரர் சுந்தரம் சதீஸ் அவர்களின், 3ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு..! (படங்கள்)

0


திருநாவற்குளம் வவுனியாவை சேர்ந்த அமரர் சுந்தரம் சதீஸ் (செழியன்) அவர்களின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை (14.05.2018) ஒட்டி “கல்விக்கு கை கொடுப்போம்” எனும் தொனிபொருளில்
அவரது மனைவி திருமதி சதீஸ் கவிதா, மகன் சாகித்யன் ஆகியோர் “அதிரடி” இணையம் ஊடாக..,

பூவரசங்குளத்தில் வசிக்கும் தாய்,தந்தை இல்லாத மற்றும் வறுமை கோட்டுக்குட்பட்ட 15 மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்களை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் திருமதி கே.ஞானமலர் அவர்களின் வேண்டுகோளுக்கமைவாக அவரது இல்லத்தில் வைத்து தமிழ் விருட்சம் ஒழுங்கமைப்பில் வழங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ. சந்திரகுமார் (கண்ணன்),வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி கே.ஞானமலர், கலந்து கொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய பிரதேச சபை உறுப்பினர் அமரர் சதீஸ் அவர்களுக்கு ஆத்ம சாந்திக்காய் வேண்டி கொண்டதுடன் அவரது மனைவி,பிள்ளை,அதிரடி இணையத்துக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார்.

மேலும் கருத்துரைத்த அவர் “பின் தங்கிய கிராம பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் புலம் பெயர் உறவுகள் அதிக கவனம் செலுத்தி அவர்களுக்கு கை கொடுக்க வேண்டும் என்றும், ஒருவர் வருடத்திற்கு ஒரு தடவையேனும் உதவினாலே கற்றலில் இருக்கும் இடர்பாடு பாதி குறைந்து விடும்” என்றார்.

அடுத்துரையாற்றிய “தமிழ் விருட்சம்” தலைவர் அவர்கள், “அமரர் சதீஸ் அவர்களின் ஆத்மா சாந்தியடைய” வேண்டி கொண்டதுடன், “திருமதி சதீஸ் கவிதா அவர்கள், தனது மன கச்டத்திற்கும் மத்தியிலும், தந்தை இல்லாத மற்றும் வறுமை கோட்டுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கியதற்கு நன்றியை” தெரிவித்து கொண்டதுடன் “அதிரடி இணையத்திற்கும் நன்றியை” தெரிவித்து கொண்டார்.

“மாணவர்களிடம் ஏன் நாம் கற்க வேண்டும்? அதனால் எமது இனத்திற்கு கிடைக்கும் பலன் என்ன?” என்ற தொனிபொருளில் உரையாற்றி, “யுத்தத்தில் இழந்ததை, மீண்டும் கல்வியால் பெற வேண்டும்” என்றார்.

அடுத்து மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கபட்டன.

இறுதியில் மாணவி ஒருவரின் நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

அமரர் சுந்தரம் சதீஸ் அவர்களின், 3ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, ஆனந்த இல்ல தாய்மார்களுக்கு விசேட மதிய உணவு..! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − 1 =

*