;
Athirady Tamil News

குமுதினி படுகொலை நினைவுத் தூபியில் அஞ்சலி..!! (படங்கள்)

0

குமுதினி படுகொலையினை நினைவு கூரும் முகமாக நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள நினைவுத்தூபி முன்பாக நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றன.

குறித்த நிகழ்வில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், வட.மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், விந்தன் கனகரட்னம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வாரத்தினை முன்னிட்டு தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில் இன்று நெடுந்தீவில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் குமுதினிப் படகு தனது பயணத்தை வழமை போல ஆரம்பித்தது.

படகு தனது பயணத்தை ஆரம்பித்து அரை மணித்தியாலத்தில் கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என 36 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட துயரம் நிறைந்த 33 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − nine =

*